Latestமலேசியா

உலக புன்னகை தினத்தை முன்னிட்டு FujiFilm மலேசியாவின் ‘புன்னகை பரப்பும் ரோட்ஷோ’

கோலாலம்பூர், அக்டோபர் 3 – உலக புன்னகை தினத்தை முன்னிட்டு, FujiFilm மலேசிய இன்று தொடங்கி அக்டோபர் 6ஆம் திகதி வரை, ‘புன்னகை பரப்பும் ரோட்ஷோவை’ ஏற்பாடு செய்துள்ளது.

அனைவரின் முகத்திலும் புன்னகையைக் கொடுக்க வேண்டும் என்ற இலக்கில் FujiFilm, இந்த ரோட்ஷோவை புத்ராஜெயா IOI வணிக வளாகத்தில் ஏற்பாடு செய்திருக்கிறது.

Baskin Robbins மற்றும் Julie’s Biscuits-உடன் இணைந்து நடத்தும் இந்த ரோட்ஷோ வயது வரம்பின்றி அனைவருக்கும் உற்சாகமான விளையாட்டுகள், பரிசுகள் நிறைந்த நடவடிக்கைகளுடன் நடைபெறும் என FujiFilm-யின் நிர்வாக இயக்குநர் Kensuke Aragane தெரிவித்தார்.

இந்த ரோட்ஷோவில், இலவச Instax புகைப்படம் எடுக்கும் நடவடிக்கை, Baskin Robbins புதியதான Ghost Pepper Chocolate பனிக்கூழ் இலவசமாக உண்ணவும் மற்றும் அதனை பரிசாக வெல்லவும் வேடிக்கையான விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், Julie’s புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள Sweet Chilli Cheese Sandwich அல்லது Sour Cream and Onion Sandwich ஆகியவை வெல்லுவதற்கான நடவடிக்கைகளும் உள்ளன.

புத்ராஜெயா IOI வணிக வளாகத்தில் நடைபெறும் இதில், அலங்கரித்த இடங்களில் படம்பிடித்து இலவசமாக பிரிண்ட் செய்து, அற்புதமான பரிசுகளுடன் செல்ல ஏற்பாட்டுக் குழுவினர் பொதுமக்களை அழைக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!