
பெசுட் , அக்டோபர் 10 –
உலு பெசுட் Kampung Kelekok கில் உடலில் கிளைகளைப் போல் தோற்றம் கண்ட 25 கிலோ ஆண் புலி ஒன்று நேற்று காலையில் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. அந்த கிராமத்தில் இந்த புலி நடமாட்டம் இருப்பது குறித்து அக்டோபர் 2ஆம்தேதியன்று தங்களுக்கு புகார் கிடைத்ததாக திரெங்கானு வனவிலங்கு மற்றும் பூங்கா துறையான பெர்ஹிலித்தான் இயக்குனர் லோ கின் சியோங் ( Loo Kean Seong ) கூறினார். இதனைத் தொடர்ந்து அந்த புலியைப் பிடிக்க அன்றைய தினமே பொறி வைக்கப்பட்டதால் மறுநாள் காலையில் அந்த புலி சிக்கியதாக Loo Kean Seong தெரிவித்தார்.
அந்த புலி கிராமவாசிகளின் 4 கால்நடைகளான மூன்று ஆடுகள் மற்றும் ஒரு பசுவையும் அடித்து கொன்றுள்ளது. இவ்வாண்டு திரெங்கானுவில் பிடிப்பட்ட இரண்டாவது புலி இதுவாகும். ஆகக்கடைசியாக பிடிபட்ட Dahan Harimau என்ற இந்த வகையான புலி இம்மாநிலத்தில் அபூர்வமாக காணக்கூடிய புலி வகை என்பதோடு அப்புலி மீண்டும் காட்டுப் பகுதியில் விடப்பட்டது.