
ஜகார்த்தா, ஜூலை 8 – இன்று தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை, பாலி தீவைச் சுற்றியுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் ஆபத்தான பெரிய அலைகள் எழும்பும் அபாயம் உள்ளதென்று, இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக தெற்கு கடற்கரையைச் சுற்றியுள்ள நீரில் ஆறு மீட்டர் வரை அலைகள் எழும்பக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரித்து, பெரிய அலைகள் உருவாகும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் கடல்சார் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலி பகுதியிலிருக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருந்து தங்களையும், தங்களை சார்ந்தோர்களையும் பாதுகாக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.