Latestமலேசியா

எனக்கு ஏய்ட்ஸ் நோயா? சகிர் நாய்க் திட்டவட்ட மறுப்பு

கோலாலம்பூர், செப்டம்பர்-10 – உயிர்கொல்லியான ஏய்ட்ஸ் நோயால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை, சர்ச்சைக்குரிய சமய போதகர் Dr சகிர் நாய்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அவ்வாறு பரவியுள்ளது வெறும் கட்டுக்கதையே என்றார் அவர்.

தற்சமயம் வெளிநாட்டிலிருக்கும் சகிர் நாய்க், தனது வழக்கறிஞர் Akberdin Abdul Kadir வாயிலாக அந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டார்.

ஏய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு தனியார் மருத்துவமனையில் சகிர் சிகிச்சைப் பெற்று வருவதாக முன்னதாக வதந்தி பரவியது.

எனினும் வெறுப்புணைர்வைத் தூண்டும் நோக்கில் பொறுப்பற்ற தரப்பினர் கிளப்பி விடும் புரளியே இது என சகிர் சொன்னார்.

இதன் பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் கண்டு பின் அடுத்தக் கட்ட நடவடிக்கை முடிவுச் செய்யப்படும் என்றார் அவர்.

சகிரின் புகழைக் கெடுக்கும் கெட்ட எண்ணத்தில் தான் அவரைப் பற்றி இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன.

இந்நிலையில் தாம் கடைசியாக நேரில் சந்தித்த போது கூட சகிர் நல்ல உடல் ஆரோக்கியத்துடனே இருந்தார் என Akberdin, FMT-யிடம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!