Latestஉலகம்

என் மரணத்திற்குப் பிறகு இந்தப் பாடலைதான் பாட வேண்டும் – மரண பாடலைப் பதிவு செய்த ஜாக்கி சான்

ஹாங்காங், ஜனவரி 17 – உலகப் புகழ்பெற்ற ஹாங்காங் நடிகர் ஜாக்கி சான், தனது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்படவுள்ள ஒரு விடைபெறு பாடலை ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Beijing-இல் நடைபெற்ற திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், சமீப ஆண்டுகளில் வாழ்க்கை, முதுமை மற்றும் மரணம் குறித்து சிந்தித்து வருவதாக கூறினார். அண்மைய காலங்களில் பல உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை இழந்தது இதற்குக் காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், முதுமையை அவர் நேர்மறையாகவே எதிர்கொள்கிறார்.

“எல்லோருக்கும் ஒருநாள் முதுமை வரும். மெதுவாக வயதாவதே ஒரு மகிழ்ச்சி. நாங்கள் முதியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் செய்தித் தளம் ‘8days’ வெளியிட்ட தகவலின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜாக்கி சான் தனது பல நெருங்கிய நண்பர்களை இழந்துள்ளார்.

சமீப காலமாக, ஜாக்கி சான் தனது பிரிந்திருக்கும் மகள் Etta Ng Chok Lam உடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நேரலை நிகழ்ச்சியில், தாம் தயாரித்த போஸ்டர்களை ஜாக்கி சான் பார்த்ததாக Etta Ng தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!