Latestஉலகம்

‘எல் மேன்சோ’ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மெக்சிகோவில் வன்முறை: 62 பேர் பலி

மெக்சிகோ, பிப்ரவரி 25 – உலகின் மிகவும் தேடப்பட்ட போதைப்பொருள் கும்பல் தலைவர்களில் ஒருவனான “எல் மேன்சோ” (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மெக்சிகோவில் வெடித்த வன்முறையில் குறைந்தது 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 25 தேசிய பாதுகாப்புப் படை உறுப்பினர்கள், சிறை காவலர் ஒருவர், அரசு வழக்கறிஞர் அலுவலக அதிகாரி மற்றும் ஒரு பெண் ஆகியோர் உள்ளடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மெக்சிகோ பாதுகாப்புத்துறை செயலாளர் குறிப்பிட்டார்.

“எல் மேன்சோ” ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (Jalisco New Generation Cartel) கும்பலின் தலைவராக இருந்து, 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்பட்ட சக்திவாய்ந்த குற்ற அமைப்பை சார்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!