Latestமலேசியா

ஏப்ரல் 2 முதல் கெந்திங் சாலைக் கட்டண சோதனை; இப்போதைக்குக் கட்டணம் இல்லை

பெந்தோங், மார்ச்-27-Jalan Genting Highlands புதிய சாலைக் கட்டண முறை சோதனை ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குகிறது.

இச்சோதனை கெந்திங் செம்பா (Genting Sempah) மற்றும் கோத்தோங் ஜெயா (Gotong Jaya) உள்ளிட்ட முக்கிய நுழைவுப் பாதையில் நடைபெறும்.

இக்காலக் கட்டத்தில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

ஆனால் அனைத்து வாகனமோட்டிகளும் Touch ’n Go, டெபிட் அல்லது கடன் பற்று அட்டைகளை tap செய்ய வேண்டும் என, Jalan Genting Highlands சாலையின் பராமரிப்பு நிறுவனமான Lingkaran Cekap Sdn Bhd அல்லது LCSB கூறியது.

புதிய முறை சரியாக செயல்படுகிறதா என்பதை பரிசோதித்து, போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.

முழுமையாக அமுலாக்கம் காணும் போது, இந்த முறை முழுக்க முழுக்க ரொக்கமில்லாமல் (cashless) இருக்கும் என்றும், ஒரு முறை மட்டுமே நுழைவு கட்டணம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது, எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!