Latestமலேசியா

ஏ.பி.எம்.எம் உறுப்பினர்கள் தொடர்பான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; மேலும் ஒரு சந்தேகப் பேர்வழி மரணம்

கோம்பாக் , பிப் 6 – சிலாங்கூர் , Tanjung Rhu கடல் பகுதியில் இதற்கு முன் APMM எனப்படும் மலேசிய கடல் அமலாக்க நிறுவன உறுப்பினர்களுடனான துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு இந்தோனேசிய பிரஜை மரணம் அடைந்தான் .

ஜனவரி 24ஆம்தேதி நடந்த அந்த சம்பவத்தில் காயம் அடைந்த நான்கு சந்தேகப் பேர்வழிகளில் ஒருவனான அந்த ஆடவன் நேற்றிரவு செர்டாங் மருத்துவமனையில் இறந்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் உசேய்ன் ஒமார் கான் (Hussein Omar Khan) தெரிவித்தார்.

ஒரு படகில் பாராங் கத்தியை வைத்திருந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகள் தாக்கத் தொடங்கியதால் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக மலேசிய கடல் அமலாக்க நிறுவன உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இதற்கு முன் உசேய்ன் கூறியிருந்தார்.

அந்த சம்பவத்தில் வெளிநாட்டு தொழிலாளி ஒருவனும் கொல்லப்பட்டான். இதில் சம்பந்தப்பட்ட APMM உறுப்பினர்கள் விசாரணைக்காக காத்திருப்பதால் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!