Latestமலேசியா

ஐந்தில் 2 மலேசிய இந்தியர்கள் வீட்டுச் சந்தையில் இனப் பாகுபாட்டைச் சந்திக்கின்றனர்; ஆய்வில் கண்டறிவு

கோலாலம்பூர், ஜூலை-16- மலேசிய இந்தியர்களில் ஐந்தில் இருவர் வாடகை வீட்டுச் சந்தையில் இனப் பாகுபாட்டைச் சந்திக்கின்றனர்.சந்தை ஆராய்ச்சி நிறுவனமான YouGov நடத்திய ஆய்வில் அது தெரிய வந்துள்ளது.

வாடகை வீட்டு விஷயத்தில் இனப் பாகுபாட்டைத் தடைச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைக்கும், இந்தியர்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் சுமார் 64 விழுகாட்டினர், இனப் பாகுபாட்டுக்கான தங்களின் எதிர்ப்பைப் பதிவுச் செய்துள்ளனர்.

இவ்வேளையில் 18 முதல் 24 வயது வரையிலான இளையோரில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் இனப் பாகுபாட்டை எதிர்க்கின்றனர்.அதுவே முழு நேர மாணவர்கள் மத்தியில் அந்த எதிர்ப்பு நிலை 42 விழுக்காடாக உள்ளது.

Architects of Diversity என்ற பொது சமூக அமைப்பு நடத்திய ஆய்வரங்கில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.நகரங்களில் வேலை பார்த்துக்கொண்டும் கல்வி பயின்றுக்கொண்டும் இருக்கும் நிலையில் வாடகை வீடுகளை நம்பியிருக்கும் இளைஞர்கள், குறிப்பாக சிறுபான்மையிர் இதில் அதிகம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது.

எனவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வீட்டு வாடகைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்த ஆய்வரங்கில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

அரசாங்கம் இதைச் செய்யத் தவறினாலோ, அல்லது இனவெறி பேதங்கள் குறித்த கவலைகளை கண்டுகொள்ளாமல் சட்டத்தை இயற்றினாலோ, மலேசிய இந்தியர்களைப் பாதுகாக்கும் மிகப் பெரிய வாய்ப்பை நாம் இழந்து விடுவோம் என,
Architects of Diversity அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜேசன் வீ (Jason Wee) கூறினார்.

இவ்வேளையில், இன அடிப்படையில் வீட்டை வாடகைக்கு விட உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென சுமார் 50 விழுக்காட்டினர் கருத்துக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடுகளின் உரிமையாளர்கள், வாடகைக்காரர்களை இன அடிப்படையில் தேர்வு செய்ய 3 முக்கிய காரணங்கள் உள்ளதாக அந்த ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.

சிக்கலான வாடகையாளர்களால் வருமான இழப்பு ஏற்படும் என்ற பயம், கலாசார அல்லது மத முரண்பாடுகள், “இன விருப்பம்” என்ற பெயரில் மறைந்திருக்கும் தனிப்பட்ட முன்வெறுப்பு ஆகியவையே அக்காரணங்களாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!