மலேசியா

கிளந்தான் செல்லும் சாலைகளில் கடும் நெரிசல்; 28 மணி நேரம் வரை சிக்கிக் கொண்ட வாகனமோட்டிகள்

கோத்தா பாரு, செப்டம்பர்-14,

நீண்ட வார இறுதி விடுமுறையில் ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பியதால் நெடுஞ்சாலைகளில் நேற்று போக்குவரத்து நிலைக்குத்தியது.

கிளந்தான் நோக்கிச் செல்லும் சாலைகளில் 28 மணி நேரங்களுக்கு நெரிசலில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு போக்குவரத்து மோசமாக இருந்தது.

சிலாங்கூர் சுங்கை பூலோவிலிருந்து பாசீர் மாஸ் சென்று சேர தனக்கு 28 மணி நேரங்கள் பிடித்ததாக, Jihh எனும் டிக் டோக் பயனர் பகிர்ந்துகொண்டார்.

அதுவும், 4 சக்கர manual இயக்க வாகனத்தில் அத்தனை மணி நேரம் பயணிப்பது எவ்வளவு ‘சிறந்த’ அனுபவமாக இருந்திருக்கும் என அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

நெடுஞ்சாலை போக்குவரத்து குறைந்தது 12 மணி நேரங்கள் வரை எடுக்கும் அளவுக்கு வெள்ளிக்கிழமையே மோசமாகியிருந்தது.

ஆனால் நேற்று அதை விட ஒரு மடங்கு மோசமானது, டிக் டோக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் லேலக்கள் பகிர்ந்த வீடியோக்களில் தெரிந்தது.

வழக்கமாக நோன்புப் பெருநாள் Balik Kampung போது தான் இதுபோன்ற மோசமான நெரிசல்கள் ஏற்படும் இப்போது சாதாரண நீண்ட வார இறுதி விடுமுறைகளிலும் நெரிசல் ஏற்படுகிறதே எனர் பலர் குறைப்பட்டுக் கொண்டனர்.

பண்டார் மலாக்காவிலிருந்து கோத்தா பாருவுக்கான பேருந்து பயணம் 14 மணி நேரங்களுக்கு நீடித்ததால், தனக்கு மயக்கம் மற்றும் குமட்டலே வந்து விட்டதாக 18 வயது கல்லூரி மாணவர் ஒருவரும் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!