
எகிப்த், ஆகஸ்ட் 14 – எகிப்த்தில் பொது மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நோயாளியின் வயிற்றிலிருந்து சிறிய கையடக்கத் தொலைபேசியை அகற்றிய சம்பவம் அனைவரையும் வாய் பிளக்க செய்துள்ளது.
அந்நோயாளி கடுமையான வயிற்று வலி, தொடர்ச்சியான வாந்தி மற்றும் சோர்வினால் அவதியுற்று மருத்துவமனைக்கு வந்தபோது, பரிசோதனைகளில் அவரது வயிற்றில் கைப்பேசி இருந்தது கண்டறியப்பட்டது.
சிறப்பு நிபுணர்கள் உடனடி அறுவை சிகிச்சை மேற்கொண்டு, எந்தவொரு சிக்கல்களும் இல்லாமல் அதனை அகற்றியுள்ளனர் என்றும் அந்நோயாளியும் தற்போது சீரான நிலையில் உள்ளார் என்ரம் அறியப்படுகின்றது.
அதே நேரத்தில் அந்த கைப்பேசி எவ்வாறு நோயாளியின் வயிற்றிற்குள் நுழைந்தது என்பதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், மருத்துவ வரலாற்றில் இடம்பெற்ற வினோத நோய் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.