
ஒஹியோ, நவ 26 – ஒரு மாத காலம் மலம் கழிக்காததால் ஆடவர் ஒருவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்க ஒஹியோவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டிவர்ட் ( James Stewart) என்ற அந்த ஆடவர் பெருங்குடலில் மலச்சிக்கல் காரணமாக 8.9 கிலோ மலம் கட்டிக்கொண்டதால் இறந்ததாக பிரிட்டனின் பத்திரிகை தகவல் வெளியிட்டது.
41 வயதான James இறப்பதற்கு முன்பு பல வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை அவர் மலம் கழிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே James தங்கியிருந்த பராமரிப்பு இல்லத்தில் அவருக்கு இந்த மலச்சிக்கள் பிரச்சனை இருக்கிறது என்று முன்கூட்டியே தெரிவிதிருந்தும் அவரை சரிவர கவணிக்காத்தால்தான இறந்துவிட்டதாக அவரின் குடுப்பத்தினர் பராமரிப்பு இல்லத்தின் மீது வழக்குத் தொடுத்திருக்கின்றனர்.



