
ஜோகூர் பாரு, அக்டோபர் -29,
சிங்கப்பூருக்குள் ஒரு பாட்டில் ‘ketum’ தண்ணீரைக் கடத்த முயன்ற மலேசிய நபர் ஒருவர், துவாஸ் சோதனை மையத்தில் சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 14 ஆம் தேதியன்று, மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபர் சோதனைக்காக நிறுத்தப்பட்டபோது, அதிகாரிகள் அவரிடம் அறிவிக்க வேண்டிய பொருட்கள் உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
.
முதலில் ‘எதுவும் இல்லை’ என அந்நபர் அதிகாரிகளிடம் பதிலளித்துள்ளார். பின்பு விரிவான சோதனையின்போது அவரது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ketum தண்ணீர் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கு சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் பிரிவு (CNB)க்கு விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எல்லைச் சோதனைகள் கடுமையாக தொடரும் என அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், ketum இலைகளும் போதைப்பொருள் வகையில் உட்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொருட்களை இறக்குமதி செய்தது நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.



