
கோலாலம்பூர்,பிப்ரவரி-19 – மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தசைக்கூட்டு அதாவது தசை மற்றும் எலும்பு வலிக்காக வெளிநாட்டில் பாரம்பரிய சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொண்டுள்ளார்.
மாமன்னர், இளம் வயதிலிருந்தே விளையாட்டு நடவடிக்கைகளில் குறிப்பாக போலோ விளையாடுவதில் அடிக்கடி ஈடுபட்டவர்.
அதோடு, தீவிர இராணுவப் பயிற்சியுடன் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் கொண்டவர் என்பதால் அவருக்கு அப்பாதிப்பு ஏற்பட்டதாக, தேசிய அரண்மனையான இஸ்தானா நெகாரா அறிக்கையொன்றில் கூறியது.
தற்போது சிகிச்சைகள் நல்லபடியாக முடிந்திருப்பதால், வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி சுல்தான் இப்ராஹிம் நாடு திரும்புகிறார்.
இந்நிலையில் மாமன்னர் விரைந்து குணமடைய பிராத்தனைச் செய்த அனைத்து மலேசியர்களுக்கும், சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ச’ரித் சோஃபியா தம்பதியர் நன்றித் தெரிவித்துக் கொண்டனர்.
சிகிச்சைக்காக பிப்ரவரி 7-ஆம் தேதி மாமன்னர் வெளிநாடு கிளம்பிச் சென்றார்.