
புத்ராஜெயா, ஏப்ரல்-1-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக ஈரானிய அதிபர் Masoud Pezeskian-னுடன் தொலைப்பேசியில் பேசியதை அடுத்து, Hormuz நீரிணையில் மலேசிய எண்ணெய் கப்பல்கள் கட்டணமின்றி பாதுகாப்பாகச் செல்ல அனுமதி கிடைத்துள்ளது.
மலேசியாவின் எண்ணெய் பாதுகாப்புக்கும் அன்வாரின் அரச தந்திரத்திற்கும் கிடைத்த முக்கிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
4 கச்சா எண்ணெய் கப்பல்கள் உட்பட 7 மலேசியக் கப்பல்கள், இனி கட்டணமின்றி அந்த நீரிணையை கடந்து செல்லும்.
Hormuz வழியாகத் தான் மலேசியாவின் எண்ணெய் இறக்குமதியில் பாதி வருகிறது.
ஒருவேளை கட்டணம் விதிக்கப்பட்டிருந்தால், உள்ளூரில் எரிபொருள் விலை உயர்ந்து, அரசாங்கத்தின் மானியச் செலவுகளும் அதிகரித்திருக்கும்.
ஆனால், அன்வார் தலைமையில், மலேசியாவின் நடுநிலையாக அரச தந்திர உறவுகள், நேரடி பேச்சுவார்த்தை எளிதாக்கி இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளன.
இதன் மூலம், அனைத்துலக அளவில் மலேசியாவின் ஆற்றல் நிரூபிக்கப்பட்டு, பாதுகாப்பும், பொருளாதார நிலைத்தன்மையும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.



