Latestமலேசியா

ஒழுக்கமற்ற உள்ளடக்கங்கள்: மலேசியாவில் Grok AI செயலிக்குத் தற்காலிகமாக தடை

 

 

புத்ராஜெயா, ஜனவரி-12 – மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, நாடு முழுவதும் Grok AI செயலி பயன்பாட்டுக்குத் தற்காலிகத் தடையை உடனடியாக அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

 

Grok AI ஒழுக்கமற்ற உள்ளடக்கங்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றியமைக்கும் வசதியை கொண்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இதற்கு முன், X Corp மற்றும் xAI LLC நிறுவனங்களுக்கு இரண்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

 

எனினும், அந்நிறுவனங்கள் வழங்கிய நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என MCMC கூறியது.

 

கட்டுப்பாடற்ற AI பயன்பாடு, பொது மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதோடு, 1998 MCMC சட்டங்களையும் மீறுவதாக MCMC எச்சரித்தது.

 

Grok AI மீதான இத்தடை, சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும் வரை தொடரும்.

 

பொது மக்கள், தீங்கு விளைவிக்கும் எந்த இணைய உள்ளடக்கத்தைக் கண்டாலும் MCMC அல்லது போலீஸில் புகாரளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

X தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த Grok செயலியைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் நிர்வாணமாக மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!