
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 22 – நாளை முதல், ஓட்டுநர் உரிம அட்டையை பெற வெளிநாட்டு பயணத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் தேவையில்லை என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
மலேசியர்களுக்கு உரிமக் கட்டணம் 20 ரிங்கிட் என்றும், வெளிநாட்டு குடிமக்களுக்கு 100 ரிங்கிட் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைவரும் நாடு முழுவதும் உள்ள JPJ கவுன்டர்கள் மற்றும் UTC மையங்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
இந்த மாற்றம், 2023 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் ஓட்டுநர் உரிம திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஓட்டுநர்கள் MyJPJ செயலி மூலம் உரிமத்தை பயன்படுத்தவும், JPJ அலுவலகத்திற்கு செல்லாமலேயே புதுப்பிக்கவும் முடியும்.
அதே நேரத்தில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், Class A1 மற்றும் A உரிமம் வைத்திருப்போர், மற்றும் பதிவுசெய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இலவசமாக உரிமத்தை பெறும் வசதி தொடரப்படும்.
JPJ மற்றும் போக்குவரத்து அமைச்சு, துரித மற்றும் எளிய சேவைக்காக MyJPJ டிஜிட்டல் உரிமத்தை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்னர்.



