
கோலாலத் திரெங்கானு, அக் 7 –
ஓய்வுபெற்ற ஆசிரியையான ஒரு பெண்மணி, தொலைபேசி மோசடிக் கும்பலிடம் சிக்கி 200,300 ரிங்கிட் இழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த 62 வயது பெண்மணி போலீசில் புகார் செய்துள்ளதாக கோலா தெரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் , துணை கமிஷனர் Azli Mohd Noor தெரிவித்தார்.
மே 25 ஆம் தேதி மனீரில் (Manir ) உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் இருந்தபோது பிற்பகல் மணி 3 அளவில் காப்புறுதி நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொண்ட ஒருவரிடமிருந்து அழைப்பு பெற்றதோடு தாம் 2.8 மில்லியன் ரிங்கிட் பணமோசடியில் ஈடுபட்டதாக கூறியதாகவும் பின்னர் அந்த தொலைபேசி அழைப்பு புக்கிட் அமானைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜாமீன் உதவி வழங்கும் மற்றொரு நபருடன் இணைக்கப்பட்டது .
மேலும் தன்னிடம் உள்ள பணத்தின் அளவை வெளியிடவும், விசாரணை நோக்கங்களுக்காக பணத்தை பேங்க் நெகாரா மலேசியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்தால்
ஜூன் 6 ஆம்தேதி முதல் 19 ஆம்தேதிவரை 18 முறை மொத்தம் 173,600 மதிப்புள்ள ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தை வங்கியில் பட்டுவாடா செய்ததாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அதோடு மேலும் 26,700 ரிங்கிட்டை நான்கு வெவ்வேறு வங்கிக் கணக்களுக்கு பட்டுவாடா செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் வங்கிக் கணக்கை சரிபார்த்த பிறகுதான் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்துப் பணமும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் , தனக்கு ஓய்வு ஊதியமாக கிடைத்த மொத்தம் 200,300 ரிங்கிட்டையும் இழந்துவிட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தண்டனைச் சட்டத்தின் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக Azli Mohd Noor கூறினார்.