
கோலாலம்பூர், செப்டம்பர் 9 – கடந்த மாதம், கிள்ளாங் பள்ளத்தாக்கு சுற்றுவட்டாரத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) நடத்திய அதிரடி சோதனையில் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஐந்து மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் ஐந்து பொதுமக்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று MACC அறிவித்துள்ளது.
கடத்தல் நடவடிக்கைகளை கண்காணித்து தடுப்பதே இவர்களின் பணி என்றாலும், இந்த அதிகாரிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடத்தல் சிண்டிகேட்டுடன் இணைந்து 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட லஞ்சத் தொகையை பெற்றுள்ளனர்.
அவர்கள் அண்டை நாடுகளில் இருந்து போதைப்பொருள்கள், சிகரெட்டுகள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்கள் நாட்டுக்குள் வருவதற்கு உதவி செய்துள்ளனர் என்றும் மாதந்தோறும் சுமார் 5 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் கடத்தப்பட்டதாகவும் தொடக்க கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படுமா என்பதனை துணை பொது வழக்கறிஞர் பரிசீலித்து வருவதாக MACC தலைவர் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.