Latest
கடப்பிதழ் இன்றி மலேசியாவிலிந்து வெளியேற முயன்ற 26 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது செய்து

ஜோகூர் பாரு, நவ 14 – ஜோகூர் பாரு சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் வழியாக இந்நாட்டிலிருந்து வெளியேற முயன்ற 26 மோட்டார் சைக்கிளோட்டிகள் எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தினால் அக்டோபர் 16 ஆம்தேதி கைது செய்யப்பட்டனர்.
1960 ஆம் ஆண்டின் கடப்பிதழ் சட்டத்தின் 2ஆவது விதி ( உட்பிரிவு 2 ) இன் கீழ் பணியில் இருந்த குடிநுழைவு அதிகாரியிடம் கடப்பிதழ் காட்டாமல் மலேசியாவிலிருந்து வெளியேறியபோது உள்நாட்டைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் தடுக்கப்பட்டனர்.
இவர்களில் 13 பேர் மீது Pontian , Pekan Nenas நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த இதர மூவர் எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட் டு அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞரின் அனுமதியோடு விடுவிக்கப்பட்டனர் .



