போர்ட் கிள்ளான், அக் 18 – கடலில் பெரிய அளவில் நீர் பெருக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போர்ட் கிள்ளானில் பிரதாதன சாலைகள் மற்றும் பூலாவ் கெத்தாம் படகு துறையில் இன்று விடியற்காலையில் வெள்ளம் ஏற்பட்டது. இன்று காலை மணி 4.55 அளவில் ஜாலான் ஷா பண்டார் ,சவுத் போர்ட் பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து போர்ட் கிள்ளான் மின்சார ரயில்நிலையம்வரை சாலையில் நீர்மட்டம் உயர்ந்தது. எனினும் காலை மணி 6.55க்கும் பிறகு வடியத் தொடங்கிய நீர் காலை மணியளவில் முழுமையாக வடிந்தவிட்டது.
இந்த நீர் பெருக்கத்தினால் பூலாவ் கெத்தாமிற்கான பெர்ரி சேவையின் அட்டவனை முழுமையாக பாதிக்கவில்லையென அந்த படகுத்துறையின் படகு சேவை உரிமையாளரான அலெக்ஸ் இங் சு லோங் ( Alex Ng Sue Long) தெரிவித்தார். நேற்றும் கடல் நீர் பெருக்கத்தினால் சாலைவரை நீரோட்டம் உயர்ந்தது. ஆனால் நேற்றைவிட இன்று நீர் மட்டம் அதிகமாக உயர்ந்தபோதிலும் முழுமையாக நீர் வடிந்துவிட்டது. பூலாவ் கெத்தாமிற்கான பெர்ரி சேவையும் வழங்கம்போலவே நடைபெற்றதாக அலெக்ஸ் கூறினார்.