Latestமலேசியா

கட்டுமானத்திற்கு சாயம் பூசும் போது 7 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து தொழிலாளி மரணம்

ஷா ஆலாம், ஆகஸ்ட்-10 – சிலாங்கூர், கிள்ளானில் கட்டுமானத் தளமொன்றின் இரும்பு கட்டமைப்புக்கு சாயம் பூசிய போது, 7 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து பொதுத் தொழிலாளி ஒருவர் மரணமடைந்தார்.

வெள்ளிக்கிழமை காலை 11.45 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், அந்த உள்ளூர் ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

A-frame இரக ஏணியிலிருந்து அவர் தவறி விழுந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, வேலையிட சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையான JKKP கூறியது.

சவப்பரிசோதனைக்காக சடலம் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

விசாரணை முடியும் வரை, அந்தக் கட்டுமானத் தளத்தில் உயரமான இடங்களிலிருந்து செய்யும் அனைத்து வேலைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதோடு, பாதுகாப்பான வேலை முறையை ஏற்படுத்தத் தவறியதற்காக குத்தகை நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!