Latestமலேசியா

கத்தியுடன் பொது மக்களைத் தாக்க பாய்ந்த ஆடவர்; துப்பாக்கி வேட்டை கிளப்பிய போலீஸ்

ஷா ஆலாம், அக்டோபர்-14,

குவாலா சிலாங்கூர், Bestari Jaya, Taman Jasa Ijok-கில் இறைச்சி வெட்டும் கத்தியோடு ஓர் ஆடவர் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் அந்நபர் கத்தியோடு பொது மக்களைத் தாக்கப் பாய்ந்தார்.

இதனால் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் வரும் போது, இன்னும் வெறி அடங்காதவராய் அவ்வாடவர் கத்திக் கூச்சலிட்டு கொண்டிருந்தார்.

வானில் எச்சரிக்கை வேட்டு கிளப்பி, ஒருவழியாக போலீஸார் அந்நபரைக் கைதுச் செய்தனர்.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வைரலான இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் 6 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!