Latest

கனடாவில் இந்திய IT ஊழியர் சுட்டுக் கொலை

கனடா, பிப்ரவரி 10 – கனடாவின் Toronto நகரில் இந்தியாவைச் சேர்ந்த IT ஊழியர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று, ‘ஷாப்பிங் சென்டர்’ வாகன நிறுத்தத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 37 வயதுடைய Chandan குமார் ராஜா நந்தகுமார் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த Toronto போலீசார், துப்பாக்கி காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இருப்பினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் சம்பவ இடத்திலிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும், இது திட்டமிட்ட தாக்குதல் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த Chandan குமார், கடந்த ஏழு ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்தார். LTIMindtree நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், டொரான்டோ கன்னட சங்கம் மற்றும் ஷிர்டி சாய்பாபா கோவில் அறக்கட்டளை வழியாக சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சண்டன் குமாரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய வெளியுறவு அமைச்சின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நீதியை உறுதி செய்ய கனடா அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!