Latestமலேசியா

கம்போங் பாரு பூச்சோங்கில் அண்டை வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்; 70 வயது முதியவர் மரணம் கண்டுபிடிப்பு

சுபாங் ஜெயா, மார்ச்-14 – சிலாங்கூர், சுபாங் ஜெயா, கம்போங் பாரு பூச்சோங்கில் கொலைச் செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடவரின் சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

Wong Al Liong என அடையாளம் கூறப்படும் அவர், திருமணம் செய்துகொள்ளாமல் அங்கு தனியாக வசித்து வந்துள்ளார்.

தினமும் காலை பசியாறுவதற்காகவும் பத்திரிகை வாங்குவதற்காகவும் வெளியும் வரும் அம்முதியவரை 2 நாட்களாகக் காணவில்லை;

வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதால் சந்தேகமடைந்து, அண்டை வீட்டுக்காரர் போய் பார்த்த போது, தலை, காது மற்றும் முதுகில் காயங்களுடன் 70 வயது அம்முதியவர் இறந்துகிடந்தார்.

சந்தேகம் ஏற்பட்டு அவர்கள் போலீஸை தொடர்புக் கொண்டனர்.

சம்பவ இடம் வந்துசேர்ந்தவர், உயிரிழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா ( Sultan Idris Shah) மருத்துவமனைக்கு சடலம் அனுப்பப்பட்டது.

வீட்டில் அவரின் கைப்பேசியையும் காணவில்லை; இந்நிலையில் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமாட் (Wan Azlan Wan Mamat ) கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!