
பேங்காக் , ஜூலை 25 – இரு நாடுகளுக்குமிடையே ஒரு நூற்றாண்டுக்கு மேலாக ரத்தக் களரி மோதல்கள் ஏற்பட்டதால் கம்போடியாவுடனான அதன் எல்லையில் 100,000த்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றியதாக தாய்லாந்து உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நான்கு எல்லை மாநிலங்களைச் சேர்ந்த 100,672 பேர் புகலிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மரண எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாக தாய்லந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்களில் குறைந்தது 32 பேரும் 14 ராணுவ வீரர்களும் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அருகேயுள்ள இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ள கம்போடியாவின் நடவடிக்கை போர் குற்றம் என தாய்லாந்து
சுகாதார அமைச்சர் Thepsuthin தெரிவித்தார்.