
கராச்சி, ஜனவரி-19-பாகிஸ்தானின் துறைமுக நகரான
கராச்சியின் Gul Plaza வணிக வளாகத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்;
ஒரு தீயணைப்பு வீரர் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கட்டடத்தில் துணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவியது.
இரவு 10 மணியளவில் தொடங்கிய தீ, ஞாயிற்றுக்கிழமை வரை கொழுந்து விட்டு எரிந்தது.
தீயைக் கட்டுப்படுத்த இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.
சுமார் 1,000 கடைகள் சாம்பலாகியிருப்பதால், வணிகர்களும் உள்ளூர் மக்களும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



