கரீபியன் தீவைத் தாக்கிய மெலிசா சூறாவளிக்கு 30 பேர் பலி

நசாவ், அக்டோபர்-30,
கரீபியன் கடல் பகுதியில் 30 பேரின் உயிரை பறித்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது மெலிசா சூறாவளி.
ஹைத்தி நாட்டில் மட்டும் 20 பேர் பெருவெள்ளத்தில் பலியாகியுள்ளனர்.
நேற்று ஜமைக்காவை தாக்கியபோது, மணிக்கு 295 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றுடன் அது பேரழிவை ஏற்படுத்தியது.
இதுவரை நால்வரின் உயிரிழப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜமைக்கா அரசு அத்தீவை ‘அபாயப் பகுதியாக’ அறிவித்துள்ளது.
பின்னர், புயல் கியூபாவின் கிழக்குப் பகுதியில் வீசி, கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கை உருவாக்கியது.
இதனால் அந்நாட்டில் 140,000 பேருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மெலிசா, கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலிமையான புயலாக பதிவாகி, தற்போது பஹாமாஸ் மற்றும் அருகிலுள்ள தீவுகளைக் கடக்கிறது.
இதற்கு முன் ஆக வலிமையானதாக 1935-ஆம் ஆண்டு Florida Keys-சில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய ‘Labor Day’ சூறாவளி திகழ்கிறது.
காலநிலை மாற்றத்தின் விளைவாக, அட்லாண்டிக் கடலில் நீரின் வெப்பநிலை அதிகரித்திருப்பதே புயலின் தீவிரத்தை அதிகரித்துள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.



