
கோலாலம்பூர், டிச 31 – கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதுவதைக் காட்டும் வீடியோ வைரலானதை தொடர்ந்து , சமூக ஊடக பயனர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. சமூக வலைத்தளத்தில் பரவலாக பரப்பப்படும் டேஷ்கேம் காட்சிகள் , அந்த கார் மோட்டார் சைக்கிளுடன் மோதும் தருணத்தை படம் பிடித்து சாலையில் ஒரு துயரமான காட்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட வாகனம் TCY7507 என்ற பதிவு எண்ணைக் கொண்ட கருப்பு நிற பெரோடுவா பெஸ்ஸா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
44 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை அக்கார் மோதியதால், அவர் நடைபாதையில் தடுமாறி விழுவது தெரிகிறது. பின்னர் அக்கார் ஓட்டுநர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை எதுவும் விசாரிக்காமல் காரை நிறுத்தாமல் தனது பயணத்தைத் தொடர்கிறார். இச்சம்பவம் கெடாவில் நடந்துள்ளதாக நம்பப்படுகிறது. எனினும் சரியான இடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.



