Latestமலேசியா

கரோவோக்கே இசை விடுதியில் சோதனை: 34 மியன்மார் பிரஜைகள், 2 உள்ளூர்வாசிகள் தடுத்து வைப்பு

பாலிக் பூலாவ், பிப்ரவரி-23-பினாங்கு, பத்து மாவுங்கில் உள்ள ஒரு கராவோக்கே இசை விடுதியில் கைதான 36 பேர், விசாரணைக்காக 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 34 பேர் மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஆடவர்களும் பெண்களுமாவர்; எஞ்சிய இருவர் உள்ளுர்வாசிகள்.

குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஏதுவாக 22 முதல் 40 வயது வரையிலான அவர்களைத் தடுத்து வைக்க, பாலிக் பூலாவ் மேஜிஸ்திரே நீதிமன்றம் உத்தரவிட்டது.

2 மாடி கடை வீட்டில் செயல்பட்டு வந்த அந்த இசை விடுதி நேற்று நள்ளிரவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

வெளிநாட்டினரை குறி வைத்து அம்மையம் செயல்பட்டு வந்ததும், பணியாளர்கள் முறையான பயணப் பத்திரமின்றி இருந்ததும் தொடக்கக் கட்ட விசாரணையில் அம்பலமானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!