
கலிபோர்னியா, ஆகஸ்ட் 5 – பாயிண்ட் ரெய்ஸ் தேசிய கடற்கரையின் (Point Reyes National Seashore) மிகவும் ஆபத்தான பகுதியில், பல மணி நேரம் சிக்கித் தவித்த இரண்டு மலையேறுபவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
உயரும் அலைகளால் வெளியேறுவதற்கான ஒரே வழியும் துண்டிக்கப்பட்டபோது, இந்த ஜோடி அப்பகுதியில் வசமாக சிக்கிக்கொண்ட நிலையில் அவசர சேவை மையத்தை உடனடியாக தொடர்புக் கொண்டுள்ளனர்.
மீட்புப் பணி குழுவினர், ஹெலிகாப்டரின் மூலம் அவ்விருவரையும் மீட்ட நிலையில் இதில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாறைகள் நிறைந்த கரையோரத்தில் மீட்புப் பணியாளர் இறங்கி, இரு மலையேறுபவர்களை மீட்கும் காட்சி வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.