Latestமலேசியா

கல்வியோடு கலையிலும் தீராத ஆர்வம்; நேர்மறையான அணுகுமுறையே சார்ஜண்ட் சூரியா ஆகாயப் படையின் ‘முத்தாக’ மாறிய இரகசியம்

கோலாலாம்பூர், அக்டோபர்-17,

கல்வியோடு கலையிலும் கொண்ட தீராத ஆர்வம், இராணுவத்தில் சிறந்த வாழ்க்கைக்கு ஒரு படிக்கல்லாக இருக்கும் என்பதை, ஆகாயப் படை சார்ஜண்ட் சூரியா ஹிர்டாவாத்தி அப்துல் ஹமீட் (Suria Hirdawati Abdul Hamid) நிரூபித்துள்ளார்.

அரச மலேசிய ஆகாயப் படையின் உளவியல் மேலாண்மை மற்றும் ஆலோசனைப் பிரிவில் உளவியல் சிறப்புப் பணி அதிகாரியாக பணிபுரியும் இவர், கலை, இராணுவக் கட்டுப்பாடு மற்றும் கல்வியறிவை தனது வாழ்க்கையில் ஒரு தனித்துவமான கலவையாக மாற்றியுள்ளார்.

2008-ஆம் ஆண்டில் ஒரு கலாச்சார கலைஞராக ஆயுதப் படையில் சேர்ந்த சூரியா, 2018-ஆம் ஆண்டில் OUM பல்கலைக் கழகத்தில் உளவியல் இளங்கலை படிப்பைத் தொடர்ந்தார்.

இந்நிலையில், கல்வியாளர்களும் கலை மீதான ஆர்வமும் பெரும்பாலும் தன்னை முன்னோக்கி அழைத்துச் சென்றதாக இவர் வண்ககம் மலேசியாவிடம் கூறினார்..

ஆகஸ்ட் 31-ஆம் தேதி தேசிய தின கொண்டாட்டத்திற்கான அதிகாரப்பூர்வ வர்ணனையாளராக ஒரு முக்கிய பங்காற்றியப் பிறகு பலரின் கவனத்தை ஈர்த்த சார்ஜண்ட் சூரியா, தானும் தனது குழுவும் ஒரு பெரிய இழப்பால் சோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்…

தற்சமயம் முழுநேர உளவியல் அதிகாரி பதவிக்காக இவர் 10 மாத சிறப்புப் பயிற்சி பெறத் தயாராகி வருகிறார்; அதே சமயம் இராணுவத்தில் இணைந்து தங்களுக்கு தாங்களே சவால் கொடுத்துக் கொள்ளும் வகையில், இளைஞர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்க அவர் விரும்புகிறார்.

சமூக ஊடகங்களில் தனது அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் தீவிரமாகப் பகிர்ந்து கொள்கிறார் சூரியா…

இதன் மூலம் இராணுவச் சேவை என்பது போர் களத்தைப் பற்றியது மட்டுமல்ல; மாறாக இராஜதந்திரம், மன உறுதி மற்றும் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட திறமை ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதை பொது மக்களுக்கு உணர்த்தும் ஓர் ஒரு ஊடகமாக இந்தத் தளத்தை அவர் பாவிக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!