
கோலாலம்பூர், அக்டோபர் 29 – சட்டத் தொழில் தகுதி வாரியம் கடந்த 17 ஆண்டுகளாக தணிக்கை செய்யப்படவில்லை என்று பிரதமர் துறையின் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தத்தின் துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
மேலும், அதன் செயல்பாட்டுச் செலவுகளுக்காக 20.5 மில்லியன் செலவிடப்படுள்ளதாக இன்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.
சட்டத் தொழில் தகுதி வாரியத்தின் கணக்குகள் 1984 முதல் 1989 மற்றும் 1992 முதல் 2006 ஆகிய காலக்கட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே வெளி தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
சட்டத் தொழில் சட்டம் 1976-யின் கீழ் நிர்வகிக்கப்படும் வாரியம் என்பதால், அதன் வருடாந்திர அறிக்கையை எந்த அமைச்சரிடமோ அல்லது அதிகாரத்திடமோ சமர்ப்பிக்கத் தேவையில்லை.
எனினும், வாரியத்தின் வருடாந்திர அறிக்கையை விரைவில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்றார் குலசேகரன்.
வாரியத்தின் ஆண்டு அறிக்கைகள் ஏன் வெளிப்படுத்தவில்லை அல்லது பொறுப்பான அமைச்சரிடம் காட்டப்படவில்லை என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் மக்களவையில் கேட்ட கேள்விக்கு குலாசேகரன் இவ்வாறு பதிலளித்தார்.