Latestஉலகம்

Southwest ஏர்லைன்ஸ் விமானம் தனியார் ஜெட்டுடன் மோதும் சூழ்நிலைக்கு உள்ளானதை தவிர்கக சிகாகோ மிட்வே விமான நிலையத்தில் தரையிறங்கியது

வாஷிங்டன் , பிப் 26 – தனியார் ஜெட்(jet) ஓடுபாதையில் நுழைந்ததால், Southwest விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று சிகாகோ மிட்வே (Chicago Midway ) விமான நிலையத்தில் தரையிறங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அமெரிக்க கூட்டரசு விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்தது.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை செவ்வாய்க்கிழமை காலை மணி 8.50 அளவில் நிகழ்ந்தது. ( Nebraska) வின் Omahaவிலிருந்து வந்த Southwest 2504 விமானம் தரையிறங்குவதற்கு தயாராய் இருந்தபோது ஓடுதளத்தில் நகர்ந்துகொண்டிருந்த FlexJet Challeger விமானத்துடன் மோதுவதை தவிர்ப்பதற்கு மீண்டும் பறக்க நேர்ந்தது

பின்னர் மீண்டும் அந்த விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கப்பட்டது. Southwest விமானம் தரையிறங்குவதற்கு முன் 15 மீட்டர் உயரத்திலும மற்றும் வர்த்தக ஜெட் விமானத்திலிருந்து சுமார் 624 மீட்டர் தொலைவிலும் இருந்தது.

மீண்டும் மேலே ஏறியபோது, ​​மற்றொரு சிறிய விமானம் 76 மீட்டர் உயரத்தில் இருந்ததாக ராடார் தகவல்கள் மூலம் தெரியவந்தது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

அமெரிக்க கூட்டரசு விமான நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!