
வாஷிங்டன், அக்டோபர் 13 –
காசாவில் நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அறிவித்தார்.
அவர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு அமைதி நோக்கிலான சுற்றுப்பயணத்திற்காக புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் முடிவடைந்து, புதிய அமைதி திட்டம் நிலைத்திருக்கும் என்று உறுதியளித்தார்.
இஸ்ரேலில், ஹமாஸ் கடத்திச் சென்றவர்களின் குடும்பங்களை டிரம்ப் சந்திக்கவுள்ளார் என்றும் அறியப்படுகின்றது.
பின்னர் அவர் எகிப்து சென்று, அதிபர் அப்துல் ஃபத்தாஹ் அல்-சிசியுடன் (Abdel Fattah al-Sisi) இணைந்து, காசா அமைதி திட்டத்தை ஆதரிக்கும் 20-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களை ஒருமுகப்படுத்தும் மாநாட்டை தலைமையேற்கவுள்ளார்.