
காஜாங், மார்ச்-21 -சிலாங்கூர், காஜாங்கில் சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிய முதியவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
Jalan Persiaran Mahkota Residence சாலையில் நேற்று அச்சம்பவம் நிகழ்ந்ததாக, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
அபாயகரமாகவும் மற்ற சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் வாகனமோட்டியதற்காக அவர் கைதானார்.
அவரின் செயலால், Jalan Mahkota Residence 1 சாலையிலிருந்து Jalan Persiaran Mahkota Residence செல்லும் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டது.
அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டானை மற்றும் 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும், 1987 போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் 60 வயது அந்நபர் விசாரிக்கப்படுகிறார்.
அம்முதியவர் எதிர் திசையில் வாகனமோட்டிய வீடியோ முன்னதாக facebook-கில் வைரலானது.