Latestமலேசியா

காஜாங்கில் கத்தியால் பொது மக்களைத் தாக்கிய சீன நாட்டுப் பெண்ணை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு

காஜாங், ஆகஸ்ட்-21 – காஜாங்கில் சாலை விபத்துக்குப் பிறகு வெறிப்பிடித்தவர் போல் கையில் கத்தியோடு பொது மக்களைத் தாக்கி எழுவருக்கு காயம் விளைவித்த சீன நாட்டு பெண், மனநல பரிசோதனைக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13-ஆம் தேதி காஜாங் Metropoint வளாகத்தில் அத்தாக்குதலை நடத்தியதாக அப்பெண் மீது 8 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது உள்ளூர் பொது பல்கலைக்கழக மாணவியான 24 வயது Liu Ting ஒற்றும் விளங்காதது போல் குழப்பத்தில் இருந்ததை கண்டு, மனநல பரிசோதனைக்கு அரசு தரப்பு விண்ணப்பித்தது.

காஜாங் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அவ்விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு, பேராக், தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள உலு கிந்தா மனநல மருத்துவமனைக்கு அப்பெண்ணை அனுப்ப உத்தரவிட்டார்.

செம்டம்பர் 19-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவித்த நீதிபதி, சந்தேக நபருக்கு ஜாமீன் வழங்க மறுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!