
காஜாங், ஆகஸ்ட் -13- சிலாங்கூர், காஜாங்கில் சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் காரோட்டியான பெண் கையில் கத்தியுடன் பொது மக்களைத் தாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.
முன்னதாக ஒரு மோட்டார் சைக்கிளை மோதிய அம்மாது, காரிலிருந்து வெளியேறி கையில் கத்தியுடன் பொது மக்களை ஆவேசமாகத் தாக்கத் தொடங்கினார்.
அதில் ஒரு மோட்டார் சைக்கிளோட்டிக்கு காயம் ஏற்பட்டு விட்டது. அம்மாதுவைப் பொது மக்கள் தடுக்க முயன்ற போது நிலைமை கலவரமானது.
இதையடுத்து அருகிலுள்ள பேரங்காடிக்குள் அவர் ஓடினார்.எனினும் பொது மக்களில் இருவர் அம்மாதுவை ஒருவழியாகப் பிடித்து கையிலிருந்த கத்தியை பிடுங்கினர்.
பின்னர் போலீஸில் அவர் ஒப்படைக்கப்பட்டார். சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை.
முன்னதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி பலதரப்பட்ட கருத்துகளை குவித்தது.