
புத்ராஜெயா, பிப்ரவரி-22 – காஜாங் மருத்துவமனையில் தனது குழந்தையின் சிகிச்சையின் போது உடனிருந்த புத்ராஜெயா மருத்துவமனையின் ENT எனப்படும் காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கானத் துறைத் தலைவர் Dr Mazlinda Mahadzir அகால மரணமடைந்தார்.
அதனை உறுதிப்படுத்திய சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட், அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தார்.
சிகிச்சையின் போது மகளுக்குத் துணையாக நின்றிருந்தவர் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார்.
அவருக்கு உடனடியாக CPR உதவிகள் வழங்கப்பட்டும் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக Dr சுல்கிஃப்ளி வருத்தத்துடன் கூறினார்.
Dr Mazlinda, தான் தலைமையேற்ற துறை மட்டுமின்றி சுகாதார அமைச்சின் பணியாளர்கள் மத்தியிலும் நன்மதிப்புப் பெற்றவர் ஆவார்.