காஜாங், அக்டோபர்-28, சிலாங்கூர், காஜாங்கில் ரொட்டி ச்சானாய் விற்கும் அங்காடிக் கடையில் பன்றித் தலைகள் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இரு உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
அக்டோபர் 11-ஆம் தேதி பண்டார் தெக்னோலோஜி காஜாங்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
35 மற்றும் 51 வயதிலான இருவரும் அக்டோபர் 15-ல் கைதானதாக, காஜாங் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் (Naazron Abdul Yusof) தெரிவித்தார்.
அச்சம்பவம் குறித்து அந்த அங்காடிக் கடையின் உரிமையாளரான 18 வயது ஆடவர் சம்பவம் நடந்த இரவே போலீசில் புகார் செய்தார்.
கருப்பு நிற சட்டையும் கருப்பு ஹெல்மட்டும் அணிந்திருந்த இரு மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து பன்றித் தலைகளை வைப்பதை CCTV-யில் பார்த்த அவர் அப்புகாரைச் செய்தார்.
அவ்வீடியோ தற்போது வைரலாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக நாஸ்ரோன் சொன்னார்.