Latestமலேசியா

காணாமல் போனவர் Mines ஏரியில் சடலமாக கண்டுபிடிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 8 – கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 44 வயதுடைய ஒருவர், சிலாங்கூர் ஸ்ரீ கெம்பாங்கன் பகுதியில் அமைந்துள்ள Mines ஏரியில், நேற்று சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

நேற்று மதியம், The Mines Cruise நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்தான் ஏரியில் மிதந்த நிலையில் வந்த சடலத்தை கண்டுபிடித்துள்ளார் என்று செர்டாங் மாவட்ட காவல் துறை தலைவர் Farid Ahmad தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அந்நபரைக் கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை அவரது மனைவி காஜாங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவரது சடலம் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் இதுவரை குற்றச் சம்பவத்துக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!