
உத்தர பிரதேசம், பிப்ரவரி 6 – உத்தரப் பிரதேசத்தில், காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த பள்ளி ஆசிரியையின் உதட்டை ஒரு மாணவன் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகத்தில் பரவிய CCTV காட்சிகளில், அம்மாணவன் ஆசிரியையோடு வாக்குவாதம் செய்வதையும், பின்பு அவரைப் பிடித்து இழுத்து உதட்டைக் காயப்படுத்தியதையும் காண முடிந்தது.
புகாரின் படி, அந்த மாணவன் தனது காதல் முன்மொழிவை ஆசிரியர் நிராகரித்ததையடுத்து ஆத்திரமடைந்து இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை மாணவன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் சம்பவம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அந்த ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் கல்வி நிலையங்களில் ஆசிரியர் பாதுகாப்பு மற்றும் மாணவர் ஒழுக்கம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது என சமூக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



