
ஆக்ரா, ஆக 7 – Ghanaவில், நாட்டின் தென் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு அமைச்சர்கள் மரணம் அடைந்தனர்.
தற்காப்பு அமைச்சர் Edward Omane Boamah மற்றும் சுற்றுப்புற, அறிவியல், தொழிற்நுட்ப அமைச்சர் Ibrahim Murtala Muhammed ஆகியோருடன் , மூன்று இதர பயணிகள் மற்றும் ஹெலிகாப்டரின் மூன்று ஊழியர்ளும் இந்த விபத்தில் கொல்லப்பட்டதாக Ghana அதிபர் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
Ashanti வட்டாரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் Ghana விமானப் படைக்கு சொந்தமான Z9 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த அனைத்து எட்டு தனிப்பட்ட நபர்களும் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த காட்டின் மையப் பகுதியில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் எரிந்துகொண்டிருந்ததை விபத்து நிகழ்ந்த இடத்தில் கைதொலைபேசியில் பதிவான காணொளியில் காணமுடிந்தது.
இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கியிருப்பதாக Ghana ராணுவம் தெரிவித்துள்ளது.
தலைநகர் Accraவிலிருந்து Obuasi நகருக்கு உள்நாட்டு நேரப்படி காலை 9 மணிக்கு புறப்பட்ட பின்னர் அந்த ஹெலிகாப்டர் காணாமல்போனதாக இதற்கு முன் அறிவிக்கப்பட்டது.