
காப்பார், ஆகஸ்ட்-1- கிள்ளான், காப்பாரில் உள்ள ஒரு ஸ்னூக்கர் மையத்தில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்ட 6 ஆடவர்களை போலீஸ் தேடி வருகிறது.
புதன்கிழமை இரவு 7 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் கூறினார். பாராங் கத்திகளோடு வந்த அக்கும்பல் 823 ரிங்கிட்டைக் கொள்ளையிட்டுத் தப்பியது.
முதலில் 3 பேர் அம்மையத்திற்குள் நுழைவதும், மற்ற மூவரும் வெளியில் 3 மோட்டார் சைக்கிள்களில் காத்திருப்பதும், CCTV கேமரா பதிவில் தெரிகிறது. இதையடுத்து ஆயுதமேந்தியக் கொள்ளைத் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
அக்கொள்ளைத் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வட கிள்ளான் போலீஸ் நிலையத்தைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தலையில் ஹெல்மட் அணிந்து, கையில் பாராங் கத்திகளை வைத்திருந்த 3 ஆடவர்கள் ஸ்னூக்கர் மையத்திற்குள் நுழைந்து, கல்லாப்பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துத் தருமாறு பணியாளரை மிரட்டும், 52 வினாடி வீடியோ முன்னதாக் வைரலானது.
அப்போது சில வாடிக்கையாளர்கள் உள்ளே ஸ்னூக்கர் விளையாடிக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.