ஜோர்ஜ்டவுன், நவம்பர்-12 – ஜோர்ஜ்டவுன், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா சாலையோரமாக கைத்துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் வைத்திருந்த ஆடவரை பினாங்கு போலீஸ் கைதுச் செய்துள்ளது.
48 வயது உள்ளூர் ஆடவரான சந்தேக நபர், சந்தையில் கோழி மற்றும் மாட்டிறைச்சி விற்பவராவார்.
ஆயர் ஈத்தாம், பாயா தெருபோங்கில் காரின் பூட் பகுதியில் அந்த சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததை, போலீஸ் விசாரணையில் அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து காரை சோதனையிட்ட போலீசார், ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ரிவால்வர், 8 உயிருள்ள தோட்டாக்களைக் கைப்பற்றினர்.
1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ்
தொடர்ந்து விசாரிக்கப்படுவதற்கு ஏதுவாக, அவர் 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.