Latestமலேசியா

கார் நிறுத்துமிடக் கட்டண விகிதம் உயர்வா? DBKL மறுப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் -5, தலைநகரில் கார் நிறுத்துமிடங்களுக்கான கட்டணம் உயர்வு கண்டிப்பதாகக் கூறப்படுவதை, கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL மறுத்துள்ளது.

கட்டணம் உயர்ந்ததாக வைரலாகியுள்ள படத்தில் இடம் பெற்றுள்ள தகவலில் உண்மையில்லை என DBKL தெளிவுப்படுத்தியது.

அந்த பொய்ச் செய்தி ஏற்கனவே பல தடவை வைரலான ஒன்று தான் என, முகநூல் வாயிலாக DBKL கூறியது.

KL மாநகரில் இனி கார்களை நிறுத்துவதற்கு முதல் 1 மணி நேரத்துக்கு 2 ரிங்கிட்டும், அடுத்தடுத்த மணி நேரங்களுக்கு 3 ரிங்கிட்டும் கட்டணமாக விதிக்கப்படும் என வைரலான படத்தில் கூறப்பட்டிருந்தது.

அதுவே நகர மையத்திற்கு சற்று வெளியே வாகனங்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு RM1.50 ஆகவும், KL-ன் புறநகர்ப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு RM1 ஆகவும் கட்டணம் இருக்கும் என்றும் அது கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!