Latestமலேசியா

கார் நிறுத்துமிடமொன்றில்இரட்டை இடங்களை ஆக்கிரமித்த BMW; பறவைகள் கொடுத்த ‘பாடம்’; நகைக்கும் வலைத்தளவாசிகள்

கோலாலாம்பூர், ஜனவரி-11 – BMW கார் ஓட்டுநர் ஒருவர், பொது கார் நிறுத்துமிடமொன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்ததால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார்.

ஆனால் அதற்குப் பிறகு நடந்தது அனைவரையும் சிரிக்க வைத்தது.

அந்த கார் நேராக ஒரு மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், காலையில் கார் முழுவதும் பறவைகளின் எச்சங்களால் மூடப்பட்டிருந்தது.

அப்புகைப்படங்கள் Threads சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதும், ‘இது இயற்கையின் நீதி’ என வலைத்தளவாசிகள் கிண்டலடிக்கத் தொடங்கி விட்டனர்.

சிலர் அதனை ‘கர்மா’ என்றும், மற்றவர்கள் ‘இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்’ என நகைப்புடன் கருத்துகளைப் பதிவிட்டனர்.

“கார் நிறுத்துமிடங்களை மதியுங்கள், மரத்தின் கீழ் கார் நிறுத்தும் முன் ஒன்றுக்கு இருமுறை யோசியுங்கள்” என்ற பாடத்தையும் இச்சம்பவம் நமக்கு நினைவூட்டுவதாக மேலும் சிலர் கூறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!