
கினாபாத்தாங்கான், ஜனவரி-25 – சபாவில் நேற்று நடைபெற்ற 2 இடைத்தேர்தல்களிலும் தேசிய முன்னணியே அமோக வெற்றிப் பெற்றது.
அம்னோ மூத்த அரசியல்வாதி டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின் டிசம்பரில் காலமானதை அடுத்து, அவர் வசமிருந்த கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கும், லாமாக் சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் கினாபாத்தாங்கானில் புங் மொக்தாரின் மகன் Mohd Naim Kurniawan Moktar-ரைக் களமிறக்கிய பாரிசான், 19,852 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிப் பெற்றது.
வாரிசான் கட்சி வேட்பாளரை சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கினாபாத்தாங்கான் என்றுமே தேசிய முன்னணியின் கோட்டையே என Naim Kurniawan நிரூபித்தார்.
சுயேட்டை வேட்பாளர் 946 வாக்குகளை மட்டுமே பெற்று வைப்புத் தொகை இழந்தார்.
இவ்வேளையில், லாமாக் சட்டமன்றத்தில் Mohd Ismail Ayob @ Miha 5,000 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
அவருக்கு 7,269 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஒரே வேட்பாளரான வாரிசான் கட்சியை சேர்ந்தவருக்கு 1,588 வாக்குகளும் கிடைத்தன.
தேசிய முன்னணியின் இந்த இரட்டை வெற்றி, மறைந்த பிறகும் மக்கள் மத்தியில் புங் மொக்தாரின் செல்வாக்குக் குறையவில்லை என்பதை காட்டுகிறது.



