
கிரிக் , ஜன 20 – பேரா ,கிரிக்கில் (GERIK) ஒரு குடும்பம் பயணம் செய்த பெரோடுவா Bezza காரை யானைகள் கூட்டம் ஒன்று சூழ்ந்து கொண்டு அக்காரை ஆட்டியதில் அக்காரில் இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இதனால் அக்காரின் முன்புற பகுதியிலுள்ள போனட் நெளித்தது. இந்ந சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மூன்று யானைகள் மற்றும் அதன் நான்கு குட்டிகளை அக்காருக்கு முன்புறம் நின்று கொண்டிருப்பதை அக்காரின் dashcamமில் பதிவான 57 வினாடிகளைக் கொண்ட காணொளியில் பார்க்க முடிந்தது.
ஜனவரி 18ஆம் தேதி மாலை மணி 6.59 அளவில் பதிவான அந்த காணொளியில் ஒரு குடும்பத்தினர் தங்களது காரில் கிழக்கு -மேற்கு நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்தபோது இந்த பயங்கர அனுபவத்தை சந்தித்ததாக @hakimzulkiflii என்பவர் டிக்டோக்கிலும், perak press முகநூலிலும் பதிவிடப்பட்டுள்ளது.
இதனிடையே கார் சேதம் அடைந்தது குறித்து சம்பந்தப்பட்ட கார் உரிமையாளரிடமிருந்து இதுவரை புகார் எதனையும் பெறவில்லையென கிரிக் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Zulkifli Mahmood தெரிவித்தார்.