கிரிம்ஸ்பியிடம் தோல்வியடைந்த மாஞ்செஸ்டர் யுனைடெட் அணி

லண்டன், ஆகஸ்ட் 28 – லீக் கப்பில் நான்காவது நிலை அணியான கிரிம்ஸ்பி (Grimsby), மாஞ்செஸ்டர் யுனைடெட் (Manchester United) அணியை 2-2 என சமநிலைக்குப் பின்பு, 12-11 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
முதல் பாதியில் சார்லஸ் வெர்னாம் (Charles Vernam), டைரல் வாரன் (Tyrell Warren) ஆகியோரின் கோல்களால் யுனைடெட் அணி பின்தங்கியது என்றும் பின்னர் பிரையன் எம்பியூமோ (Bryan Mbeumo), ஹாரி மாகுயர் (Harry Maguire) ஆகிய வீரர்களின் கோல்களால் சமநிலை பெற்றனர் என்றும் அறியப்படுகின்றது.
இந்நிலையில் கிரிம்ஸ்பி அணியின் வீரரான எம்பியூமோ, பெனால்டியில் அடித்த கோலால் யுனைடெட் அணி தோல்வியைச் சந்தித்தது.
பிரீமியர் லீக்கில் வெற்றியின்றி தொடங்கிய யுனைடெட் அணி, இந்த தோல்வியால் மேலும் சிக்கலில் சிக்கியுள்ளது என்றும் அறியப்படுகின்றது.
இந்நிலையில், மற்ற ஆட்டங்களில், பிரைட்டன் (Brighton) ஆக்ஸ்போர்டை (Oxford) 6-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய நிலையில், புல்ஹாம் (Fulham) மற்றும் எவர்டன் (Everton) தங்கள் ஆட்டங்களில் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றன.